44
நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்
தண்டனைக்காக, அன்று நூற்றுக்கு மேற்பட்ட குற்றவாளிகள், அவனெதிரில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர். வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த இக்குற்றவாளிகளில் முதல் ஆளாக நிறுத்தப்பட்டவர் புகழ் வாய்ந்த உருது மொழிக் கவிஞர் அகமது. தான் செய்த குற்றம் தான் என்ன? எதற்காக என்னைக் கொண்டு வந்து இங்கே நிறுத்தியிருக்கிறார்கள்? என்ற ஆழ்ந்த சிந்தனை அவருடைய முகத்தில் தேங்கி இருந்தது. தைமூர்லிங்க், கவிஞர் அகமதுவைக் கண்டவுடனேயே சற்று வியப்படைந்தவனாய், “ஓகோ, கவிஞர்! உங்கள் பெயர்தானே அகமது! உங்களுடைய ஒவ்வொரு பாடல் வரியும் சுத்தமான வெள்ளியைக் காட்டிலும் பத்தரை மாற்றுத் தங்கத்தைக் காட்டிலும் விலை மதிப்புடையது அல்லவா?” என்று கிண்டல் செய்தான்.
கவிஞர் அகமது தலையைத் தாழ்த்தாது, “ஆமாம், இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்றார்”, “அப்படியா! அப்படியானால் இந்தக் குற்றவாளிகளில் ஒவ்வொருவருக்கும் நீர் நிர்ணயிக்கும் மதிப்பீடு தான் என்ன?” என்றான் அரசன். “ஒவ்வொருவனுடைய விலை மதிப்பும்,