கவிஞர் வெள்ளியங்காட்டான்
45
ஒவ்வொரு விதமாக இருக்கும். இப்பொழுது இங்கே உங்களுக்கு எதிரில் தண்டனைக் குள்ளாகி நின்று கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான மனிதர்களின் சராசரி விலை சுமார் நான்கு கோடி ரூபாய்கள் மதிப்பிடலாம்” என்றார் கவிஞர் அகமது.
இது அரசன் எதிர்பாராத பதிலாக இருந்தது. உள்ளத்தில் உதித்த சினம், அவனுடைய கண்களைச் சிவக்கச் செய்தது. தன் பற்களை நற நற வென்று கடித்துக் கொண்டான். கோபக் குரலில் “என்ன சொன்னாய்?” ஒருவனுடைய விலை நான்கு கோடி ரூபாய்களா? அப்படியானால் இந்த நாடு முழுவதையும் கட்டி ஆட்சி செய்கிற அரசனாகிய என்னுடைய மதிப்பீடுதான் என்ன?” என்று ஆவேசமாகக் கேட்டான்.
கவிஞர் புன்னகை புரிந்தார். சாதாரணமான குரலில் “உங்களுடைய விலை சற்று அதிகமாகவே வைத்து மதிப்பிட்டாலும் ஒரு நூறு ரூபாய்களுக்கு மேற்பட முடியாது” என்றார். “அடே, என்ன உளறுகிறாய்; நாவினை இறுக்கிப் பிடி; நீ யாரை இவ்விதமாகக் கிண்டல் செய்து கொண்டிருக்கிறாய் என்பதை நினைத்துப் பார்த்தாயா? சாவின் எல்லையில்