பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்

நிறுத்தப் பட்டிருக்கும் உனக்கு இன்னமும் என்னோடு விளையாடும் எண்ணமா? நான் அவ்வளவுக்கு ஓர் அற்பனா?” என்று அரசன் கர்ஜனை செய்தான்.

இந்தக் கர்ஜனைக்குக் கவிஞர் ஒரு துளியுங்கூட அச்சப்ட்டவராகத் தெரியவில்லை. உள்ளத்தில் ஒளிவு மறைவு இல்லாது நயமான குரலில் சொல்லத் தொடங்கினார் : “அரசர் வீணாக இவ்வாறு ஆவேசப்படவேண்டிய அவசியமில்லை. நான் சொன்ன விலை மதிப்பு உங்களுக்கல்ல, நீங்கள் அணிந்து கொண்டிருக்கிற அணிகலன்களுக்கும், ஆடை களுக்கும் மட்டும்தான் அது”. “அப்படியானால் நீ எனக்கு நிர்ணயம் செய்த விலை மதிப்பீடுதான் என்ன?” என்று கேட்டான். உங்களுக்கு ஒரு விலையை மதிப்பிட்டுக் கூறுவது இயலாததாக உள்ளது. ஏனெனில் இந்த உலகத்தில் மனிதனாகப் பிறந்த எவன் ஒருவனின் இருதயத்தில் ஈவு, இரக்கம், நீதி, ஒழுக்கம், கருணை, அன்பு, சத்தியம் என்னும் இவை இருக்கவில்லையோ அப்படிப்பட்ட ஒருவனை யாரும் மனிதனென்று கூட மதிக்க மாட்டார்கள். ஆனதினால் தாங்கள் ஒரு விலை மதிப்பிட முடியாத மகாத்மாவாகவே கூட இருக்கலாம்”.