இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10. கேள்வியும் பதிலும்
ஹிட்லரின் பிரச்சார மந்திரியாக இருந்தவர், கோயபெல்ஸ். ஒரு முறை அவர் ஒரு வயோதிக யூதப் பாதிரியாரைச் சந்தித்தார். கோயபெல்ஸ் அவரை "நீங்கள் யூதர்கள். உங்களுடைய மத தர்ம நூல் "தால் முத்” என்று சொல்லப்படுகிறது. அதை நீங்கள் நன்கு பயின்றிருப்பதனால் ஒரு விதமாக தார்மீக ரீதியில் தர்க்கம் செய்கிறீர்கள் என்றும், அதிலிருந்து உங்களுடைய அறிவுச் சக்தி வெளிப்படுகிறது என்றும் நான் கேள்விப்பட்டுள்ளேன். நீர், எனக்கு அதைக் கற்பிப்பீர்களா?” என்றான்.