பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

51


“மிகவும் நல்லது, கேளுங்கள் : இரண்டு வாலிபா்கள் புகையும், புழுதியுமாகவுள்ள ஒரு குழாய்க்குள் புகுந்து சற்று நேரம் விளையாடுகிறாா்கள். பிறகு, வெளியே வந்து நேருக்கு நோ் நின்று ஒருவனையொருவன் பார்க்கிறான். அவா்களில் ஒருவன் புழுதியும் புகையும் படிந்த உடையும், உடல் முழுவதும் அழுக்குப் படிந்தவனாகவும் காணப்படுகிறான். மற்றொருவனுடைய உடலிலோ உடையிலோ ஒரு துளியுங் கூட அழுக்குப் படிந்திருக்கவில்லை. அந்த இருவரில், “உடனே சென்று குளிக்கவேண்டும்” என்ற எண்ணம் யாருக்கு முதலில் தோன்றக்கூடும் சொல்லுங்கள் பாா்க்கலாம்” என்ற தன்னுடைய முதல் கேள்வியைக் கேட்டாா், அந்தச் சாதுவான பாதிரியாா்.

“ஓ, இதுதானா அந்தக் கேள்வி? இதில் யோசிக்க, என்ன சிரமம். அழுக்குப் படிந்திருந்த வாலிபன் தான் முதலில் போய்க் குளிப்பான்” என்றான்.

கோயபெல்ஸின் இந்த விடையைக் கேட்ட பாதிரியாா், “தப்பு......... அழுக்குப் படியாதிருந்த வாலிபன் தான் முதலில் போய்க் குளிப்பான்” என்றாா்.