பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்


“எப்படி?” என்று வியப்பாகத் திருப்பிக் கேட்டான், கோயபெல்ஸ்.

“எப்படியென்றால், இருவரும் விளையாடிவிட்டு வெளியே வந்து ஒருவனை ஒருவன் பார்த்துக் கொள்கிறான். அழுக்குப் படிந்த வாலிபன், மற்றவனைப் பார்த்து ‘புகையும், புழுதியும் படிந்த குழாயுக்குள் சென்று விளையாடி விட்டு வந்தும், தனக்கு ஒரு துளி அழுக்கும் படியவில்லையல்லவா? என்று யோசித்தால் அழுக்குப்படியாத மற்ற வாலிபன், இந்த அழுக்குப் படிந்தவனைப் பார்த்தவுடனே, ‘இருவரும் அழுக்குப் படிந்தவராயுள்ளோம்’ என்று யோசித்தவாறு குளிப்பதற்காக உடனே முயலுவான்” என்றார், பாதிரியார்.

“உங்களுடைய பதில் மிகவும் சரியானது. அப்படியே இருக்கலாம். சரி அடுத்த கேள்வியைக் கேளுங்கள்” என்றான், கோயபெல்ஸ்.

“இரண்டாவது கேள்வி : இரண்டு வாலிபர்கள் புகையும் புழுதியுமாகவுள்ள ஒரு குழாய்க்குள் புகுந்து சற்று நேரம் விளையாடுகிறார்கள். பிறகு வெளியே வந்து நேருக்கு நேர் நின்று ஒருவனை