பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

53

யொருவன் பார்க்கிறான். அவர்களில் ஒருவன் புழுதியும், புகையும் படிந்து உடையும், உடல் முழுவதும் அழுக்குப் படிந்தவனாகவும் காணப்படுகிறான். மற்றொருவனுடைய உடலில் ஒரு துளியுங்கூட அழுக்குப் படிந்திருக்கவில்லை. அந்த இருவரில் ‘உடனே சென்று குளிக்க வேண்டும்’ என்ற எண்ணம் யாருக்கு முதலில் தோன்றக் கூடும்?”

“இது, முதலில் கேட்ட அதே கேள்விதான்” என்றான், கோயபெல்ஸ்.

“அல்ல; இது முற்றிலும் வேறான கேள்வி” என்றார், பாதிரியார்.

“அப்படியே இருக்கட்டும். இந்து இரண்டாவது கேள்வியில் நீர் என்னைத் தோற்கடிக்க முடியாது. அழுக்குப்படியாதிருந்த வாலிபனே, முதலில் குளிக்க முயலுவான்” என்றான், கோயபெல்ஸ்.

“தப்பு” என்றார், பாதிரியார்.

அப்படியானால், இந்த விடை உங்களாலேயே முன்னால் சொல்லப்பட்டதல்லவா” என்றான் கோயபெல்ஸ்.