பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

55


“அந்தக் கேள்வி, வேறொன்றைப் பற்றியது. இந்தக் கேள்வியின் சரியான விடை அதுவல்ல. அழுக்குப் படிந்த வாலிபன் தான் முதலில் குளிக்கச் செல்கிறான்” என்பதுவே இந்தக் கேள்வியின் விடை. எப்படியென்றால், முன்பு போலவே இருவரும் நேருக்கு நேர் நின்று ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் போது, அழுக்குப் படியாதிருந்த வாலிபன் அழுக்குப் படிந்தவனைப் பார்த்து, ‘ஐயோ, நானும் இவனைப் போன்று தான் அழுக்கடைந்திருப்பேன் என்று சிந்திக்கிறான். ஆனால், உடனே தன்னைத் தான் பார்த்துக் கொண்டு அவனைப் போல் நான் மாசு படிந்தவனாகயில்லை என்று நினைப்பான். அப்போது, அழுக்குப் படிந்த வாலிபனும், தன் தோழனைக் கண்டு தானும் இவனைப் போலவே மாசற்றவனாக உள்ளேனோ? - என்று தனக்குள்ளேயே எண்ணுவான். மேலும் தன்னுடைய உடலையும், உடையையும் உற்றுப் பார்ப்பான். அவனுடைய அழுக்கு படிந்த தோற்றம் “உடனேயே குளிக்க வேண்டும்” என்ற எண்ணத்தை உண்டாக்கக் கூடுமல்லவா?” என்றார் பாதிரியார்.