பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்


“ஓ, மிகவும் சரி, உம்முடைய சாதுர்யத்துக்கு ஒரு அளவை என்னால் காண இயலவில்லை. சரி, அந்த மூன்றாவது கேள்வியையும் கேட்டு விடுங்கள்” என்றார், கோயபெல்ஸ்.

“மூன்றாவது கேள்வி : மிகமிகக் கடினமானது. இரண்டு வாலிபர்கள் புகையும், புழுதியுமாகவுள்ள ஒரு குழாய்க்குள் புகுந்து சற்று நேரம் விளையாடுகிறார்கள். பிறகு வெளியே வந்து........ ”

“இதுவும் நீர் முன்பு கேட்ட கேள்வியே”

“அல்ல.......... சொற்கள் மட்டும் அவைகளே தான். ஆயினும், கேள்வி முற்றிலும் வேறானது”

“அப்படியானால், அழுக்குப் படியாத வாலிபனே குளிக்க முயலுவான்” என்றான், இடைமறித்து, கோயபெல்ஸ்.

“தப்பு” என்று பாதிரியார் மறுத்தார்.

“அது தவறென்றால், அழுக்குப் படிந்திருந்த வாலிபன்தான் குளிப்பான்” என்கிறான், கோயபெல்ஸ்.

“தப்பு” என்றார், பாதிரியார்.