பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

57


“இரண்டும் தப்பு என்றால், சரியான விடைதான் என்ன?” என்ற அதிகாரக் குரலோடு கர்ஜித்தான், கோயபெல்ஸ்.

“இந்தக் கேள்வியே அறிவீனமானது என்பதுடன் சரியான பதில். எப்படியென்றால் இரண்டு வாலிபர்கள் ஒன்றாகப் போய்க் குழாய்க்குள் புகுந்து விளையாடினால் ஒருவருக்கு அழுக்குப் படிந்தும் மற்றொருவருக்கு அழுக்குப் படியாதும் இருப்பது தான் எப்படி? இந்தச் சிறிய வினாவில் இருக்கக் கூடிய சிக்கலான, “இயல்புக்கு மாறானது இது” என்று புரிந்து கொள்ளாத ஒருவன் அந்த மகத்தான 'தால் முத்’ என்ற நூலை எப்படிச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். நீங்களே சொல்லுங்கள்” என்றார் யூதப் பாதிரியார்.

பொய் சொல்லியே புகழ் பெற்ற கோயபெல்ஸ்க்கு இந்த உண்மை மிகவும் கசந்தது.