இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11. ஜூடஸின் முகம்
நான் மிகவும் சிறுவனாயிருந்த போது “அறிஞர்” என மக்களால் போற்றப்பட்ட ஒரு கிழப் பாதிரியார் சொல்ல நான் கேள்விப்பட்ட கதை இது. இந்தக் கதையை என் வாழ்நாளில் நான் அடிக்கடி நினைவு கூர்ந்து மகிழ்ந்ததுண்டு. நண்பர்களிடம் கூறியும் குதூகலம் அடைந்திருக்கிறேன்.
பல நூற்றாண்டுகளுக்கு முன் “சிசிலியன்” எனும் பட்டினத்தில் ஒரு மாதா கோவில் இருந்தது. கோவிலின் வெளிப்புறச் சுவர்களில் ஏசுவின் இளமை தொட்டு இறுதிகாறும்