கவிஞர் வெள்ளியங்காட்டான்
59
அவருடைய திருவுருவத்தை வர்ண ஓவியங்களாகத் தீட்டிக் காட்ட வேண்டுமென ஆவலாய் ஒரு ஓவியர் ஈடுபட்டிருந்தார். இவ்வாறு அவர் சித்திரிக்கத் தொடங்கி சில ஆண்டுகள் கழிந்தும் உளஞ்சோராது, உறுதி குன்றாது, தீட்டிக் கொண்டேயிருந்தார். மேலும் தீட்டி முடிக்க வேண்டியிருந்தவை, இரண்டேயிரண்டு ஓவியங்கள் மட்டுமே. அவையாவன : இளமைப் பருவத்திலிருந்த கிறிஸ்துவின் உருவம் மற்றும் ஜீடஸ்க்யாரட்’ உருவம் மட்டுமே. இந்த இரண்டு ஒவியங்களையும் முடிப்பதற்கு இன்றியமையாதிருந்த “ரூப தரிசினிகள்” இருவருக்காக அந்த ஓவியர் ஊர் உலகமெல்லாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிச் சஞ்சரிக்கலானார்.
ஒருநாள், ஒரு சிறிய நகர்ப்புறத்தில் ஒரு கோடியில் அவர் வந்து கொண்டிருக்கும் போது வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சில குழந்தைகள் அவருடைய கண்களுக்குத் தென்பட்டனர். அவர்களில் சுமார் பன்னிரண்டு ஆண்டுப் பருவத்திலான பாலகன் ஒருவனின் முகம் ஓவியக் கலைஞனின் உள்ளத்தை ஈர்த்தது. ஒரு திவ்விய ஞானியின் முகத்து ஒளி அந்தச்