பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்

எனவே இது நிறைவேறாமல் நின்று போய்விடுமோ’ என்ற சஞ்சலமும் அவருக்கு ஏற்படாமல் இல்லை. இந்த மகானின் ஓவிய மாலை எங்கு முழுமையாகமலேயே போய் விடுமோ என்ற வியாகூலமும், அவர் உள்ளத்தில் வைத்தவாறே ஒவ்வொரு ஊராக ஒரு ரூபதர்சினியைத் தேடத் தொடங்கினார். முதிர்ந்த வயதினராயிருந்தும் அந்த ௐவியர் தன் முயற்சியை மட்டும் இடையில் நிறுத்தவே இல்லை.

இதற்குள்ளேயே இந்த சித்திரக் கலா வரிசையின் புகழ் எல்லா ஊர்களுக்கும் பரவத் தொடங்கி விட்டது. கோரமான முரட்டு சுபாவமுடைய ஒன்றிரண்டு பேர் ‘ஜூடஸ்’ ஓவியத்திற்கு ஏற்ப எங்களை வைத்து உங்களுடைய மனக்குறை தீர ‘சித்திரத்தைத் தீட்டி முடித்து விடுங்களென்று முன் வந்து ௐவியரிடம் கூறியதுமுண்டு. ஆயினும் ௐவியர் உள்ளம் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. வாழ்க்கையின் அழுத்தத்தைத் தாங்க முடியாத நிலையில் இவர்கள் இயல்பு மாறிற்றே தவிர உளத்தில் மாறியவர்களல்ல. எனவே, ௐவியர் அவர்களை வைத்துச் சித்திரம் தீட்ட ஒத்துக்