இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
vi
நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்
பதிப்புரையாக
அமரர் தத்துவக் கவிஞர் வெள்ளியங்காட்டான் அவர்களின் ‘பேத்தி’ - என்றதும் இந்த உயிரோட்டமான உயர்ந்த உறவு உண்மையில் உள மகிழ்ச்சிக்கு உரிய உணர்வே.
ஏனெனில் - எனது வாழ்க்கையின் அடித்தளத்தை ஆழமாக அமைத்து அதன் ‘அகல - நீள - ஆழ - அடர்த்தியின்’ அர்த்தங்களை அவ்வப்போது அறிவுறுத்துகிறார் அவர்.
“அவரை” எனது தாத்தா என்று குறிப்பிடுவதை விடவும் “எனது ஆசான்” என்று அழைப்பதே அறிவுப்பூர்வமானது என அறிகிறேன். ஆனந்திக்கிறேன்.