பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்


இதே போன்ற கொடியவன் ஒருவனைத்தான் அவர் இதுகாறும் தேடிக் கொண்டிருந்தார். எனவே, அவர் தம்முடைய எண்ணம் கைகூடும் காலம் வந்து விட்டது என்ற மன நெகிழ்ச்சியோடு அந்த மகாப் பாவியை மெல்லத் தன் முகமாகத் திருப்பி, “என்னோடு நீ கூடவே வா, நான் உனக்கு வேண்டிய மது, மாமிசம் இன்னும் நீ விரும்புகின்றதனைத்தையும் நிறையத் தருகிறேன், ஒவ்வொரு நாளும் தவறாது நீ குடிக்குமளவு மதுவும், அதுவுமின்றி உணவும் தருகிறேன்; உடைகளும் தருகிறேன். மேலும், நீ விரும்பினால் கைநிறையக் காசும் தருகிறேன்” என்று கூறி வற்புறுத்தினார்.

இறுதியாக அந்தக் கொடியவனான ஜுடஸின் தோற்றத்திற்குப் பொருத்தமான ‘ரூபதரிசினியாய் ஒருவன் ஓவியருக்குக் கிடைத்து விட்டான். இரவு, பகல் என்ற பேதத்தையும் மறந்தவராய் வெறிபிடித்தவரைப் போல உடல் சிரமம் பாராட்டாது அந்த ஓவியர் அவனை வைத்துக் கொண்டு தம்முடைய, மகத்தான ஓவிய வரிசையைத் தீட்டி முடிப்பதில் உளமொன்றிப் போனார். இது முடியும் தறுவாயில் அந்தக் கொடிய ஜூடஸ் ரூப