கவிஞர் வெள்ளியங்காட்டான்
65
தரிசினியாயிருந்தவன் ஏதோ ஒருவித மறதி நிலையிலிருந்து நினைவு நிலைக்கு வந்தவனைப் போல் அவனிடம் மாற்றம் தெரிந்தது. திக்பிரமை பிறப்பதற்கு மாறாய் ஒருவிதமான தெளிந்த உத்வேக உணர்ச்சி அவனுடைய முகத்தில் தென்படலாயிற்று. பயம் கலந்த பார்வையோடு தனக்கெதிரில் உருவாகிக் கொண்டிருக்கக்கூடிய தன்னைப் போன்ற ஒரு ஓவியத்தை அவன் சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒருநாள், அந்த மனிதனின் முகபாவம் மாறியிருப்பதைக் கண்ட அந்த ஓவியர் தான் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்துக் கேட்டார்; ‘அப்பா’ உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு ஏதாயினும் தொந்தரவு ஏற்பட்டிருந்தால் தயங்காமல் நீ என்னிடம் சொல். நான் அதற்கு வேண்டிய உதவி செய்கிறேன் என்றார்.
இதைக்கேட்ட அந்த ரூபதரிசினி முகத்தைக் கவிழ்த்தவாறு விக்கி விக்கி அழத் தொடங்கினான். ஒருபாட்டம் அழுது முடித்து விட்ட பிறகு வயோதிக ஓவியரின் முகத்தை உற்று நோக்கிச் சொல்லத் தொடங்கினான்.