68
நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்
சேகரிப்பதுவே அவர்களுடைய வேலையாக இருந்தது.
“தங்கத் துரை” என்றே பிரசித்தி பெற்ற ‘குரோசஸ்’ அரசனின் ராஜதானியின் பெயர் ‘சார்டிஸ்’. ஒரு முறை கிரேக்க நாட்டிலிருந்த பெரிய விஞ்ஞானியும், நீதிபதியுமான ‘சொலோன்’ என்பவர் உலக யாத்திரை செய்தவாறு குரோசஸின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். குரோசஸ் இந்தப் பெருஞ் செல்வத்தின் காரணமாக ஒரு மதோன் மத்தனாகி இருந்தார். மிகப் பெருமித உணர்வோடு தன்னுடைய அரண்மனையிலிருந்த அந்த மாபெரும் செல்வத்தை அவன் விருந்தினராகிய சொலோனுக்கு விவரித்துக் கூறிக் காட்டினார். அரண்மனையில் நிறுவப்பட்டிருந்த துரண்கள் அனைத்தும் தங்கமாக இருந்தன. அரண்மனையில் உபயோகப்படுத்திக் கொண்டிருந்த பெரியதும் சிறியதுமான எல்லாப் பாத்திரங்களும் தங்கத்தினாலேயே செய்யப் பட்டிருந்தன. குளிக்கும் தண்ணீர்த் தொட்டி முதல் தாம்பூலம் தரித்து, மென்று துப்புவதற்கான காளாஞ்சியங் கூட தங்கத்தினாலேயே ஆக்கப்பட்டிருந்தது. மற்றுமுள்ள ஒவ்வொரு பொருளையும் செல்வச்