பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

69

செருக்கோடும், விம்மிதமான குரலோடும் சுட்டிக் சுட்டிக் காட்டலானான். வியப்புற்ற நிலையில் சொலோன், அரசர் சுட்டிக் காட்டிய அவ்வளவு பொருட்களையும் சகிப்புத் தன்மையோடு பார்த்தார்.

அதன்பின் அரசன் குரோசஸ் கேட்டான். “சொலோன், நீங்கள் பற்பல நாடு நகரங்களை யெல்லாம் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்துள்ளிர். அப்படி நீங்கள் சுற்றிப் பார்த்த நாடு நகரங்களில் வசிக்கும் மக்களில் மிகமிகச் சுக புருஷன் யார்? உம்மால் சொல்ல முடியுமா?” என்று.

இவன் தன்னையே ஒரு சுக புருஷன் என எண்ணிக் கொண்டு இவ்வாறு வினவுகிறான் என்று சொலோன் எண்ணினார். ஆனால், சொலோன் சொன்னார் : “ஏதென்ஸ் நகரத்தில் தாலஸ் என்ற ஒரு அறிஞன் மிகமிகச் சுக புருஷனாக அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தான்” என்று. அரசன் குரோசஸின் எதிர்பார்ப்பு முற்றிலும் வீணாயிற்று. ‘அப்படியா, ஆனால் நான் அவருடைய பெயரைக் கூட இதுகாறும் கேள்விப்படவில்லையே? என்றான்.