பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்


அரசன் குரோசஸுக்கு இதைக் கேட்கவும், ஏமாற்றமடைந்த இருதயத்திலிருந்து கோபம் கொப்பளித்தது. “சொலோன், தரித்திரர்களைப் பற்றியும் பிரக்யாதியற்றவர்களைப் பற்றியும் ஏன் எனக்கு எடுத்துக் கூறுகிறீர். என்னுடைய கீர்த்தியையும், மகிழ்ச்சியையும், செல்வத்தையும் நேரில் கண்டு கூட அவர்களைக் காட்டிலும் நான் சுக புருஷன் என்பதை வாயிலிருந்து சொல்லாக வெளியிட உங்களுடைய சின்னப் புத்தி அனுமதிக்க வில்லையா?” என்று கூக்குரலிட்டான், அந்த அறிவற்ற அரசன்.

அரசனுடைய கோபத்திற்குத் துளியும் சலனமடையாத உள்ளத்தோடு, “அரசே! நீர் இப்பொழுது அளவு கடந்த பெருஞ்செல்வத்தின் உச்சக் கட்டத்தில் அமர்ந்துள்ளீர் என்பது உண்மை. ஆனால், இன்னும் எத்தனையோ ஆண்டு காலம் நீர் இந்த மண்ணில் உயிரோடு இருந்து வாழ வேண்டியவராக உள்ளீர். வியப்புத் தரும் உம்முடைய இந்த மாபெரும் செல்வத்தின் மகிழ்ச்சி கர வாழ்க்கை எந்த முறையில் உம்மை நிறைவுறுத்தவுள்ளது என்று உங்களுக்காகட்டும், எனக்காகட்டும் தெரிந்திருக்கவில்லை. அதனால் இப்போதே உம்மை ஒரு மனிதன் என்று கூட என்னால்