கவிஞர் வெள்ளியங்காட்டான்
73
சொல்ல இயலவில்லை” என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
ஒரு சில மாதங்கள் கழிந்தன. ஒரு நாள் ‘பர்சியா’ தேசத்தின் அரசன் ‘சைரஸ்’ ஒரு பெரிய படையோடு வந்து குரோசஸின் அரண்மணையை முற்றுகையிட்டான். கடுமையான போராட்டத்தின் இறுதியில் குரோசஸ் தோல்வியடைந்தது மாத்திரமல்ல, பகைவர்களினால் சிறைப்படுத்தவும் பட்டான்.
இரக்க சித்தமற்ற அந்தச் ‘சைரஸ்’, ‘குரோசஸை’ உயிரோடு சுட்டுப் பொசுக்க வேண்டும் என்று தன்னுடைய படை வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.
அந்தப் படை வீரர்கள் பெரும் மரக்கட்டைகளைக் குவித்து அடுக்கிக் கயிறுகளினால் ஆடாது அசையாது பிணிக்கப்பட்டிருந்த தங்கதுரை என்று பெயர் படைத்த குரோசஸை அந்தச் சிதையின் மேல் தூக்கிப் போட்டார்கள். சிதை உடனேயே நெருப்பும் மூட்டப்பட்டது.
இப்போது, குரோசஸின் இரண்டு கண்களிலும் தாரை தாரையாகக் கண்ணீர் வழியத் தொடங்கிற்று. அவன், ‘சொலோன்,