இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிஞர் வெள்ளியங்காட்டான்
vii
“அவரது” திருப்பெயரால் அமரகவி வெள்ளியங்காட்டான் நினைவு அறக்கட்டளை (இலவச) நூலகத்தையும், ஆதரவற்ற குழந்தைகள் - பெண்கள் - முதியோர்கள் மற்றும் உடல்-மன-ஊனமுற்றோருக்கான இலவச காப்பகத்தையும் "ஆன்ம அமைதி” தியான-யோக-ஆன்மீக மையத்தையும், "பிரபஞ்ச அமைதி ஆசிரமம்” என்ற அறக்கட்டளை ஒன்றையும் நானும், எனது கணவரும் இணைந்து நிறுவி அன்னாரது நினைவுகளை எல்லாம் நிஜமாக்கி வருகிறோம்.
இன்னும், அவரது அற்புதப் படைப்புகள் அனைத்தையும் அச்சேற்றி அருமைப் புத்தகங்களாக்கி உலக மக்களுக்கு அர்ப்பணிக்கவே அதிகம் ஆவலுறுகிறோம்.
மேலும், "நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்" என்னும் இப்புத்தகத்தை நமது "பிரபஞ்ச அமைதி ஆசிரமம்" சார்பாக எனது தாத்தா கவிஞர் வெள்ளியங்காட்டான் அவர்களின் நினைவாக, எனது உயிர்த் தாய் வெ.இரா.நளினி நாராயணசாமி அவர்கள் வழியாக வெளியிடுவதில் ஆத்ம ஆனந்தம் அடைகிறோம்.என்றென்றும்
N. சிவா சித்ரா M.Sc..,M.Ed.,M.Phil.,
பிரபஞ்ச சேவா மையம்
நல்ல கவுண்டம்பாளையம், பதுவம்பள்ளி
கருமத்தம்பட்டி வழி, கோவை - 641659
98422 80205, 98422 20285, 98422 20295