பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்

சொலோன், சொலோன்’ என்று கூவலானான். அங்கேயே நின்று இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த கல் நெஞ்சனனான ‘சைரஸ்’ இந்தக் குரோசஸைப் பார்த்து, “ஏன் ‘சொலோன், சொலோன்’ என்று கூவினாய்? இதனுடைய அர்த்தமென்ன?” என்று கேட்டான்.

உடனே, குரோசஸ் தன்னுடைய அரண்மனைக்கு அன்றொரு நாள் வந்திருந்த யாத்ரிகர், சொலோனுக்கும் தனக்கும் இடையே நடந்த சம்பாஷனைகளை விவரித்துக் கூறி மேலும் “மிகப் பெரும் செல்வந்தனான தன்னுடைய இறுதி வாழ்வின் நிலை எப்படியாகிறதோ தெரியவில்லை என்று சொல்லி இருந்தது, இப்போது என் நினைவுக்கு வந்தது. அதனால் அந்தப் பேரறிஞர் சொலோனுடைய பெயரைச் சொல்ல நேர்ந்தது” என்றான்.

குரோசஸ் சொன்ன, இந்த வார்த்தைகளை அரசன் சைரஸ் கூர்ந்து கேட்டான். தன் உள்ளத்தை அவை ஓரளவு மாற்றமடையச் செய்வது போலிருந்தது. எனவே, “உண்மை, உண்மை, ஆம், அவர் சொன்னது உண்மை. நான் கூட இன்னும் வெகுகாலம் வாழ வேண்டியவனாக உள்ளேன். “என்னுடைய