கவிஞர் வெள்ளியங்காட்டான்
75
வாழ்வின் முடிவும் கூட என்னால் முன் கூட்டி அறியக் கூடாததாகவுள்ளது” என்று எண்ணி, படைவீரர்களைக் கூவி உடனே, “இந்த எரியும் நெருப்பை அவித்து விடுங்கள்” என்று கட்டளையிட்டான்.
மேலும் கூறினான். “படைவீரர்களே, உதாரகுணத்தோடு நான் குரோசஸை மன்னித்திருக்கிறேன். எனவே குரோசஸை இந்த நாட்டிற்கு அரசனாக ஆக்கி விட்டு நாம் நம்முடைய நாடாகிய ‘பரிசியா’வுக்குத் திரும்பலாம்”, என்றான்.
குரோசஸ் மறுபடியும் அரசனானான். அன்றிலிருந்து தங்கம் தேடும் பழக்கத்தை அறவே கைவிட்டான். கூலியாட்களுக்கு விமோசனம் ஏற்பட்டதன்றித் தன்னுடைய பொருள்களையும்கூட எல்லாருக்கும் பங்கிட்டளித்து நல்ல பெயரெடுத்தான். பிற்காலத்தில் குரோசஸ் மக்களால் மிகவும் பாராட்டப்படுபவனாக வாழ்ந்து வரலானான்.
பணத் திமிர், அதிகாரத் திமிர் எவரிடம் இருக்கிறதோ அவர் தமக்குத் தாமே நாசம் தேடிக் கொள்கிறார் என்பதற்குச் சரியான மேற்கோள் கதை இதுவல்லவா?
🌑