இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
76
நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்
13. புண்ணிய பூமி
1884-இல் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ‘பிராங்லின் பியர்ஸ்’, அந்த தேசத்தின் ஆதிவாசிகளான சிவப்பு இந்தியரிடமிருந்து விசாலமான ஒரு பகுதி நிலத்தை, விலைக்கு வாங்கிக் கொள்ள விரும்பி அவர்களுக்கு அந்தச் செய்தியை அறிவிக்கிறார். அப்பொழுது, சிவப்பு இந்தியர்களின் தலைவனாயிருந்த, ‘சியாடில்’ என்பவன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு இது. தன்னுடைய கடிதத்தில் சியாடில் வெள்ளையர்களான அமெரிக்கரின் அறிவற்றி நாகரிகம் என்ற பெயரில், இயற்கைச் சூழ்நிலையக் கெடுத்து விடாமல் காப்பாற்றித்