பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

77

தீர வேண்டிய அவசியத்தை, வெகு நுட்பமாக விளக்கி, நிரூபிக்கிறான். வில்லும், அம்பும் கையில் பிடித்து, தலையை வண்ணப் பறவைகளின் இறகுகளைக் கொண்டு தம்மை அழகுபடுத்திக் கொள்ளும், “அநாகரிகன்” ஒருவன் அமெரிக்காவின் “நாகரிக” ஜனாதிபதிக்கு புவியின் இயற்கை நிலையைக் குறித்து, எழுதிய சொற்கள் இன்றைய நமது பாரத தேசத்திற்கும் மிகப்பொருந்துவதாகவே உள்ளது.

“ஆகாயத்தையும், பூமியின் வனப்பு மிக்க இயற்கைத் தோற்றத்தையும் உங்களால் இவற்றை எப்படி விலைக்கு வாங்க முடியும்? விற்க முடியும்? இந்தக் கற்பனையே எங்களுக்குப் படு விசித்திரமாக உள்ளது. நறுமணம் கமழும், மென்மைக் காற்றின் புதுத்தன்மையும், பாடிக் கொண்டோடும் புனித நதிகளின் செவிக்கினிய ஒலியும், நம்முடைய ஆளுமையில் இல்லாதிருக்கும் போது நீங்கள் அவற்றை வாங்கத்தான் முடியுமா? விற்கத்தான் முடியுமா? எங்களுடைய இந்தப் பூமியின் ஒவ்வொரு சிறு அம்சமும் எங்களுக்குப் புனிதமானது. உள்ளங் கவரும் பசிய மரங்களின் ஒளி மிகுந்த இளந்தளிர்களும், மணலோடு சேர்ந்த