பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்


கடற்கரையும், அடர்ந்த காடுகளில் படிந்துள்ள பனித்துளிகளும், ரீங்காரமிடுகின்ற வண்டுகளும், தும்பிகளும் - இவைகளெல்லாம் எங்கள் மக்களது நினைவுகளில் படிந்துள்ள மறக்க முடியாத அனுபவங்கள்.

வெள்ளை மனிதர்கள் காலஞ்சென்ற பின், சுவர்க்கமடைந்து அங்குள்ள கணங்களிடையே உலாவுங்கால், அவர்கள் பிறந்து வாழ்ந்திருந்த புனிதமான நமது தாய் போன்ற இந்தப் புவியை அறவே மறந்து விடுகிறார்கள். ஆனால் சிவப்பு மனிதர்களாகிய எங்களுக்கு இந்த நிலமகளே அன்னையாக இருப்பதினால் மாண்டு, மறைந்தபோதுங்கூட இந்த அழகிய பூமியை மறந்து விடுவதில்லை. நாங்கள் இந்த மண்ணின் மக்கள். மண் எங்களுடையது. மணங்கமழும் மலர்கள் எங்கள் உடன் பிறப்புகள். கண்ணைக்கவரும் புள்ளி மான்கள், காட்டுக் குதிரைகள், கழுகு, கௌதாரிகள் - இவைகள் எங்களுடைய சசோதரர்கள். “மலைச் சிகரங்கள், பசுமையான கண்ணைக் கவரும் புல்வெளிகள், அதில் வயிறு நிறைய மேய்ந்து கன்றுகளை நினைத்துக் கூவிக் கொண்டு வரும் எங்கள் வளர்ப்புப் பிராணிகள், மற்ற மனிதர்கள்