பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

79

நாங்கள் எல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பள்ளம், படுகைகளில், ஆறு குளங்களில் பளபளக்கும் தண்ணீர் கேவலம் அது தண்ணீரல்ல, அது எங்கள் முன்னோர்களின் இரத்தம்.

நாங்கள், உங்களுக்கு விற்கவுள்ள நிலம் மிகப் புனிதமானது என்று நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பூக்கள் மலர்ந்துள்ள பொய்கைகளின், புனித நீரில் பிரதிபலிக்கின்ற ஒவ்வொரு பொருளும், எங்கள் மக்கள் வாழ்வின் செயல்பாடுகள், நினைவுகளை சதா சொல்லிக் கொண்டுள்ளதென்று நீங்கள் உங்கள் மக்களுக்கு அறிவித்துவிட வேண்டும். ஆம், அந்தத் தண்ணீரின் சிறு அலைகளில் எங்களுடைய தந்தைக்குத் தந்தையின் கம்பீரமான குரல் அடங்கியுள்ளது என்பதையும், நீங்கள் தயவு செய்து மறந்து விடக்கூடாது.

எங்கள், நீர் வேட்கையைத் தணித்து மகிழ்விக்கும் புனித நதிகள், எங்கள் உற்றார் உறவினர்கள் போல, எங்கள் குழந்தைகளுக்கும் பசி தணிய உணவளிக்கிறது. எங்களுடைய ஓடங்களை இயங்க வைக்கிறது. நதிகள், எங்கள் உறவினர்கள் மட்டுமல்ல சற்று சிந்தித்துப்