80
நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்
பார்த்தால், உங்களுடைய உறவினர்களுங்கூட இவற்றையெல்லாம் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் உங்கள் மக்களுக்கும், உள்ளத்தில் பதியச் சொல்லி வைக்க வேண்டும். நீங்கள் உங்கள் உடன் பிறந்தவர்களிடம் அன்பு காட்டுவதைப் போல, இந்த ஆறு குளங்களின் மீதும் அன்பு காட்ட வேண்டும்.
வெள்ளையர்கள் எங்கள் வாழ்வின் நெறிமுறைகளைச் சரிவரப் புரிந்து கொள்வதில்லை. இரவோடு இரவாக வந்து தனக்கு வேண்டியவற்றை பூமியிலிருந்து, வலிந்து எடுத்துக் கொள்ளும், ஒவ்வொரு வெள்ளையனும், பாரதீனன். இந்தப் புனிதத் தரணி அவனுக்குச் சத்துரு சகோதரனல்ல. புது மண்ணை அடைய ஆசைப்பட்டு வெள்ளை மனிதன் தன்னுடைய பழைய மண்ணை மறந்து விட்டு முன்னுக்குச் செல்லுகிறான். அவன் தன்னுடைய மூதாதையரின் சமாதிகளை அங்கு விட்டுவிட்டுப் புதிய இடத்தில் குடியேறுகிறான். அவை பாழாகிவிடுகின்றன. தன்னுடைய மக்களோடு சேர்ந்து பிறருடைய மண்ணை ஆக்கிரமிக்கிறான் அவன். தன்னை