பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

81

ஈன்ற தாய் உடன் பிறப்பு, உலகம், வானம் இவைகளையெல்லாம் அடைய முடியும். அசிங்கம் செய்ய முடியும். ஆடு, மாடுகளை விற்பதைப் போல இவைகளையும் விற்க முடியும் என்பது போல நெறிமுறையின்றி வாழ்கிறான். அவனுடைய இந்தப் பசி, வண்ண வண்ணச் செடி கொடிகளின் பேரழகை நாசப்படுத்தி, பொட்டல் காடுகளாக மாற்றி விடுகிறது.

எங்களுடைய நெறிமுறைகள் உங்களுடையதைவிட முற்றிலும் வேறானவை. உங்களுடைய நகரங்களைப் பார்க்கும் போது, எங்களுடைய கண்களுக்கு நோயை உண்டு பண்ணுகின்றன. பாரம்பரியமாய் நாங்கள் அநாகரிகர்களாக இருப்பதினால், உங்களுடைய நடத்தையைப் புரிந்து கொள்ளக் கூடாதவராக உள்ளோம். வெள்ளை மனிதரின் நகரங்களில், மனோரம்மியமான பொது இடங்களே இல்லை. வசந்த காலத்தில் இளந்தளிர்கள் தழைப்பதைப் பார்ப்பதற்கோ, வண்ண, வண்ணப்பட்டுப் பூச்சிகளின் மெல்லிய இறக்கைகளின் ஒலியைக் கேட்பதற்கோ அங்கு இடமே கிடையாது. நான், அநாகரிகன் ஆனதன் காரணமாக இவைகளெல்லாம் எனக்கு அர்த்தமாகாமல் கூட