பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்

இருக்கலாம். நிசப்தமான, இரவு நேரங்களில் கூகைக் கோழியின் கூச்சலைக் கேட்காத குளக்கரையிலுள்ள தவளைகளின் இரவு நேரக் கீர்த்தனைகளைக் கேட்காத வெள்ளை மனிதர்களின் வாழ்வு, வறட்சியான வாழ்வேயல்லவா? நானொரு சிவப்பு இந்தியன். அதனால், வெள்ளையர்களைப் பற்றி எனக்கு அதிகமாக வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை.

விலங்குகள், பறவைகள், தாவரங்கள், மனிதர்கள் இவர்களெல்லாம் சுவாசிப்பது ஒரே பிராணவாயுவை மட்டும். அதனால், சிவப்பு மனிதனுக்கு மென்மையான காற்று மகத்தானதாகவுள்ளது. வெள்ளை மனிதன், தான் சுவாசிக்கும் பிராணவாயுவைப் பற்றியுங்கூட, எண்ணிப் பார்ப்பதில்லை. இறப்பதற்காகவே வந்திருக்கும் ஒரு மனிதனைப் போன்று அவன் தன்னைச் சுற்றியுள்ள, துர்நாற்றத்தையுங்கூட அறிந்து கொள்ளாத ஜடப் பொருளாயுள்ளான். எங்களுடைய பூமியை உங்களுக்கு விற்கப்பட்ட பின் காற்று, எங்களுக்கு எவ்வளவு மகத்தானதாயிருந்து என்பதை நீங்கள் உள்ளத்தில் வைத்திருக்க வேண்டும். காற்று தன்னுடைய சக்தியை எல்லா ஜீவராசிகளோடும் பங்கிட்டுக்