பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

83

கொள்கிறது என்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் பாட்டனுக்கு அவனுடைய முதல் மூச்சாக மூக்கின்வழி சுவாசித்தது பிராணவாயுவே. அவன் கடைசி வேளையில் வெளியே விட்ட மூச்சுங்கூட அதே பிராணவாயுதான். நீங்கள் காற்றின் புனிதத் தன்மையை அறிந்து காப்பாற்ற வேண்டும். அப்போது மட்டும் நீங்கள் இந்த நிலத்திலிருந்த செடி கொடிகளிலிருந்து வெளிப்படும் பரிமளத்தோடு கூடிய சுத்தமான காற்றை நுகர்ந்து, ஆனந்தப்படலாம்.

நான் ஒரு அநாகரிகன் ஆனதினால் வேறொன்றும் எனக்குத் தெரியாது. ஓடுகின்ற ரயில் வண்டியில் அமர்ந்துள்ள வெள்ளையன் தன் துப்பாக்கியிலிருந்து வெடித்த குண்டுகள் பட்டு ஜீவன் விட்டு இங்கு அழுகிக் கிடக்கும் நூற்றுக்கணக்கான காட்டெருமைகளை நான் நேரில் கண்டிருக்கிறேன். எங்களுடைய உணவுக்காக மட்டும், நாங்கள் கொல்லக்கூடிய எருமைகளைவிட புகையை விட்டுக் கொண்டு ஓடும் இவர்களது இரும்பு வண்டி மேலானது எவ்வாறு என்பது எனக்குத் தெரியாது. ஏனெனில், நானொரு அநாகரிகன்.