பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருநல் யானை போர்க்களத்து ஒழிய விழுமிய வீழ்ந்த குருசிலர்த்தம்மின்; புரையோர்க்குத் தொடுத்த பொலம் பூந் தும்பை நீர்யார் என்னாது முறை கருதுபு சூட்டிக் காழ் மண்டு எஃகமொடு கணையிலைக் கலங்கிப் பிரபினை அரிந்த நிறம் சிதை கவயத்து வானத் தன்ன வளநகர் பொற்ப நோன் குறட்டன்ன ஊன்சாய் மார்பின் உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின்; நிவந்த யானைக் கணநிரை கவர்ந்த புலர்ந்த சாந்தின் விரவுப் பூந்தெரியல் பெருஞ்செய் ஆடவர்த்தம்மின்: பிறரும் யாவரும் வருக! ஏனோரும் தம்மென, வரையா வாயிற் செறாஅது இருந்து பாணர் வருக! பாட்டியர் வருக! யாணர்ப் புலவரொடு வயரியர் வருக’ என இருங்கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம் கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி' х

-மதுரைக் காஞ்சி (728-752).

سسه ضا ته سو

87