பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ற தொல்காப்பியம் செய்யுளியல் நூற்பா(தொ.பொ.480) உரையில், பேராசிரியர் "நக்கீரர், ஒன்னார்த்தெறலும், உவந்தாரை ஆக்கலும் வல்ல தவம் பெற்றவர்’ எனப் போற்றுவதும், இவர் பெருமைக்கு நல்ல எடுத்துக்காட்டு களாம்,

நக்கீரர் பாடல்களைப் படிப்பார்க்கு, அவர் அழுக்காறு இலாத இயல்பினை ஒழுங்காறாக் கொண்ட உயர் பேராளர் என்பது புலனாகும். நக்கீரர், தம்மையொத்த புலவர்களைப் போற்றும் பண்புடையவராவர். தம் காலத்தும், அதற்கு முன்னும் வாழ்ந்து பெரும்புகழ் பெற்ற புலவர் பெருமக்களை, நக்கீரர் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

பாரி, பறம்புமலை நாடாண்ட பெருவீரன். சிறந்த கொடையாளன். அவன் புகழ் பரவுவது கண்டு, அழுக்காறு கொண்டு, அவனை அழிக்க எண்ணிய மூவேந்தர்கள், அவன் பறம்புக் கோட்டையை முற்றுகை இட்டனர். முற்றுகை பல நாள் நீ டி த் த து. உள்ளிருப்போர்க்கு உணவுக்குறை யொன்றும் உண்டாகவில்லை. எனினும், அரிசி இல்லாக் குறையொன்று மட்டும் இருந்தது. அதைப், பாரியின் நண்பரும், பெரும் புலவருமாகிய கபிலர் உணர்ந்தார். பறம்பிற்கு உள்ளே நெல்லரிசி கிடைத்தல் அரிது. அரிசி, அரணுக்கு வெளியிலிருந்தே வருதல் வேண்டும். அதற்கு ஓர் உ. பா யம் கண்டார். பறம்புமலைக் கிளிகளைப் பழக்கினார். கோட்டையைக் கடந்து வெகுதொலைவு சென்று, ஆங்குள்ள வயல்களின்றும் நெற்கதிர்களை வாயிற் கெளவிக் கொணறுமாறு பணித்தார். அவையும் அவ்வாறே செய்தன. அரண்வாழ் வீரர் உணவு பெற்றனர். அதனால் ஆற்றல் மிகுந்து விளங்கிய அவர்கள் துணையால், பாரி, பறம்புக் கோட்டையைவிட்டு வெளிப்போந்து மூவேந்தர்களை யும் வென்று துரத்தினான். இவ்வாறு பாரி பெற்ற