வேறுபுலம் பரப்பி = வெள்ளக் கொடுமையில்லாத மேட்டு
நிலங்களில் மேயவிட்டு. புலம் பெயர் புலம்பொடு கலங்கி - தாம் பயின்ற நிலத்தைக் கைவிட்டுப் போன தனிமை யினாலேயே வருந்தி நீடு இதழ்க் கோடல் கண்ணி = நீண்ட இதழ்களையுடைய
காந்தள் மலர்களால் தொடுக்கப் பட்டதலை மாலை, நீர் அலைக் கலாவ = மழைநீர் அலைத்தலாலே கலக்கம் எய்த மெய்க்கொள் பெரும்பணி நலிய - தம் உடல் கொண்ட
கடுங்குளிர் வருத்துவதால். பலருடன் கைக்கொள் கொள்ளியர் = பலருடன் கூடியிருந்து
கையிடத்தே கொண்ட நெருப்பினை உடையராய். கவுள்புடையூஉ நடுங்க = பற்கள் பறைகொட்டி நடுங்க. மாமேயல் மறப்படி விலங்குகள், இரை தேடுவதை மறந்து
நடுங்க. மந்தி கூர = குரங்கு குளிரால் நடுங்க. பறவை படிவனவீழ - பறவைகள் மரங்களில் தங்குவ
தினின்றும் காற்று மிகுதியால் மண்ணில் வீழ கறவை = தாய்ப் பசுக்கள். கடியவீசி = கடிவாய் உதைத்து, கன்று கோள் ஒழிய - பால் உண்ண வரும் கன்றுகளை
ஏற்றுக் கொள்வதைக் கைவிட குன்று குளிர்ப்பு அன்ன - மலையையும் குளிரச்செய்வது
போன்ற. கூதிர்ப் பானாள் - கூதிர் பருவத்தின் நடுயாமத்தில். வரிவுரை - 'கொடுங் கோற் கோவலர்' என்ற வர் முல்லை பாட்டிலும் இடம் பெற்றுள்ளது. (முல்லை-15).
19