புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப் பொன்போற் பீரமொடு புதற்புதல் மலரப் பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி இருங்களி பரந்த ஈர வெண்மணற் செவ்வரி நாரையொ டெவ்வாயுங் கவரக் கயல் அறல் எதிரக் கடும்புனல் சாஅய்ப் பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண்மழை அகல் இரு விசும்பில் துவலை கற்ப, அங்கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த வண் தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க முழுமுதல் கழுகின் மணியுறழ் எருத்தின் கொழுமடல் அவிழ்த்த குமூஉக்கொள் பெருங்குலை நுண்ணிர் தெவிள வீங்கிப் புடைதிரண்டு தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற நளிகொள் சிமைய விரவுமலர் வியன்காக் குளிர்கொள் சினைய குருஉத்துளி துரங்க ’’
( 13-28).
£2–Gos: புண்கொடி முசுண்டை = மெல்லிய கொடியினையுடைய
முசுட்டையில் மலர்ந்த.
பொறிப்புற வான்பூ= புள்ளிகளைப் புறத்தே கொண்ட
வெள்ளியபூக்கள்.
பொன்போல் பீரயொடு -பொன் போன்ற நிறத்தினையுடைய
பூர்க்கம் பூக்களோடு.
புதல்புதல் மலர் = புதர்கள் தோறும்புதர்கள் தோறும் மலர. பைங்கால் கொக்கின் மென்பதை - பசிய கால்களையுடைய கொக்கின் மென்மையான
சிறகுகளையுடைய,கூட்டம்.
23 .