இருங்களி பரந்த = கரியவண்டல் படிந்த ஈரவெண்மணல் - ஈரம் பட்டவெள்ளிய மணற்பரப்புகளில் செவ்வரி நாரையொடு - சிவந்த வரிகள்பொருந்திய நாரைக்
கூட்டங்களோடு இருந்து. எவ்வாயும் கவர - எவ்விடங்களிலும் கவர்ந்து கொள்வதற்கு
வாய்ப்பாக. கயல் = கயல் மீன்கள் அறல் எதிர - அறல் இட்டு ஓடும் தெளிந்த நீர் ஓட்டத்தை
எதிர்த்து ஏறுமாறு. கடும் புனல் சாஅய் - மிக்க நீரைப் பொழிந்து விட்டமையால் பெயல் உலந்து = பெய்யும் தன்மை வறண்டு. எழுந்த பொங்கல் வெண்மழை - எழுந்த பொங்கும்
வெண்மேகங்கள். அகல் இரு விசும்பில் - அகன்ற பெரிய வானில். துவலை கற்ப=சிறுசிறுதுவலைகளாகத் தூவும் தொழிலைக்
கல்லா நிற்க. - அங்கண் அகல் வயல்=அழகிய, பரந்து அகன்ற வயல்களில். ஆர் பெயல் கலித்த=மிக்க மழை நீரால் செழித்து வளர்ந்த, வண் தோட்டு நெல்லின்=வளமான இலையை யுடைய
நெல்லிலிருந்து. வருகதிர் வணங்க=வெளிப்படும் கதிர்கள் பாரமிகுதியால்
தலை வணங்க முழுமுதல் கழுகின்=பருத்த அடியினையுடைய பாக்கு
மரத்தின். மணி உறழ் எருத்தில்=நீல மணியை ஒத்த நிறம் காட்டும்
கழுத்தில் கொழுமடல் அவிழ்த்த=பருத்த மடலிலிருந்து பாளையாக
- : " . . . . . . . . " விரிந்த. . . . . . . குழுஉக்கொள் பெருங்குலை-திரட்சியைக்டகொண்ட பெரிய
தாறுகளில்
24