பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புடையது என அறிந்து, அரிதின் முயன்று அதையே வாங்கி வைத்திருந்தனர். கோடையில் வெப்பம் தணிக்கும் சந்தனக்குழம்பு, கூதிர்ப் பருவத்தில் குளிரின் கொடுமையை மேலும் கொடுமையுடையதாக்கும் என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தமையால், அ ரி தி ன் மு. ய ன் று வாங்கிய அவற்றை,அப்போது பயன்படுத்துவது விடுத்து, மாளிகையின் ஒருபால்வறிதேபோட்டு வைத்திருந்தனர். அதைக்கண்ணுற்ற புலவர், மாளிகையின் மற்றொரு பக்கத்தை நோக்கினார்.

கருங்கொள்ளின் நிறம்வாய்ந்த கருங்கல்லால் ஆன அம்மியின்முன் குற்றேவல் மகளிர் சிலர் அமர்ந்து, பூசிக்கொண்டால், மேனியின் தட்பத்தைத் தணித்து, மேனிக்கு வெப்பம் ஊட்டவல்லதான் கஸ்தூரி போலும் மணப்பொருட்களை வைத்து, சாந்தென அரைத்துக் கொடுக்க அம்மனைக்குரிய மங்கை ந ல் லா ள், மேனியில் பூசிக்கொள்வான் வேண்டி வாங்கிச் செல்வது கண்டார்.

காலம் சிறிது கடந்தது. சென்றவள், குளித்து முடித்து, ஈரம் பட்ட கூந்தலோடே வெளிப்பட்டாள். அதற்குள்ளாகக், குற்றேவல் மகளிர், எரிக்கப்பட்டவழி இனிய நறுமணம் நாறும், தகரம் என அழைக்கப்படும் மயிர்ச்சந்தன விறகை எரித்துக்கொண்ட நெருப்பைக் கணப்பில் வாரிக்கொணர்ந்து, அதில் கருநிறம் கொள்ளுமாறு முதிர்ந்து வயிரம் ஏறிய அகில் கட்டையையும், வெள்ளிய கண்டசருக்கரையையும் இட்டுப் புகை எழுப்பலாயினர், மனைக்குரியாள், அக்கணப்பருகே அமர்ந்து, ஈரம்பட்டதன் கூந்தலுக்குப் புகை ஊட்டலாயினள்.

கூந்தல் மெல்லமெல்ல ஈரம்அற்று மணம் பெற்று விட்டது. அவ்வகையால் பக்குவப்பட்ட கூ ந் த ைல வாரிமுடித்தாள் அவள். அதற்குள் ஏவல் மகளிர் மலர்ப் பிடாவைக்கொணர்ந்து அவள் முன் வைத்தனர். அதில்

39