பக்கம்:நெய்தற் கன்னி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

தொடத் - தொட நீங்கும்

அரசியல் உணர்வினைச் செல்வமும் கல்வியும் சிறக்கப் பெற்ற பெருங்குடி மக்களே யல்லாமல் அவர் கீழ்ப் பணிபுரியும் ஏவல் மகளிரும் பெற்றிருக்கும் பெருமை யுடையது ஒரு நாடு. அந்நாட்டு அரசன் நல்லனாயின், அவன் ஆளும் நாடு செல்வத்திற் சிறந்திருக்கும். நாடாளும் அரசன்பால் உலக மக்களை யெல்லாம் உறவாகக் கொண்டு ஒம்பும் உள்ளமும், உயிர்போகும் நிலை வந்துற்ற விடத்தும் உரைத்த சொல் பொய்த்துப் போகா உரமும், வேண்டியார் வேண்டாதார் எனப் பாராது அன்ைவர்க் கும் ஓர் அறம் வழங்கும் நடுவுநிலைமையும் ஆய அரசர்க்கு இன்றியமையா அருங்குணங்கள் என்றும் நீங்காதிருத்தல் வேண்டும். அவ்வரும் பெரும் குணங்களின் பிறப்பிடம் இவன் என, உலகோர் அவனைப் புகழ்ந்து பாராட்டுதல் வேண்டும். அத்தகையோன் ஆட்சி மேற்கொண்டக்கால், தன் நாட்டில் செல்வமும், சிறந்த ஒழுக்கமும் மேன்மேலும் ஒங்கவும், அவன் பொய் வழங்காதிருத்தலோடு, அப்பொய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/101&oldid=590178" இலிருந்து மீள்விக்கப்பட்டது