பக்கம்:நெய்தற் கன்னி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ. 103

தாம் கண்டு மகிழ்ந்த அக்காட்சி நலனைத் தம்மொத்த பிற பணி மகளிர் பாலும் கூறி, அவரையும் மகிழ்ச்சியில் திளைக்கப் பண்ணினர்.

“நயனும், வாய்மையும், நன்னர் நடுவும் இவனில் தோன்றிய இவைஎன இரங்கப் புரைதவ நாடிப் பொய்தடிந்து இனிது ஆண்ட அரைசனோடு உடன்மாய்ந்த நல்லூழிச் செல்வம்போல் நிரைகதிர்க் கனலி பாடொடு பகல்செலக் - 5. கல்லாது முதிர்ந்தவன் கண்இலா நெஞ்சம்போல் புல்இருள் பரந்தரூஉம் புலம்புகொள் மருள்மாலை

இம்மாலை ஐயர் அவிர் அழல் எடுப்ப, அரோ என் கையறு நெஞ்சம் கனன்று தீ மடுக்கும். 10

இம்மாலை இருங்கழி மாமலர் கூம்ப, அரோ, என் அரும்படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும்;

இம்மாலை கோவலர் தீங்குழல் இனைய, அரோ, என் 15 பூவெழில் உண்கண் புலம்புகொண்டு இனையும்;

எனவாங்கு, - - படுசுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளைக், குடிபுறம் காத்துஒம்பும் செங்கோலான் வியன்தானை விடுவழி விடுவழிச் சென்றாங்கு அவர் - 20 தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/105&oldid=590182" இலிருந்து மீள்விக்கப்பட்டது