பக்கம்:நெய்தற் கன்னி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

ஊக்கினன் ஊசலை

எழுதா ஒவியம் போலும் எழில் உடையாள் ஒர் இளம் நங்கை கடற்றுறை நகர் ஒன்றில் வாழ்ந்திருந்தாள். அவள் தன்னைப் பார்க்க நேரும் ஆடவரைப் பார்த்த அளவில்ேயே பித்தேறப் பண்ணும் பேரழகுடையவள். கருநீல மலர் இரண்டு இணையாக நின்று மலர்ந்தாற் போல் தோன்றும் அவள் கருவிழிகள் மருண்டு மருண்டு நோக்கும் மாண்புடையவாம். அதனால், மடமையும் இளமையும் வாய்ந்த பெண்மானின் விழிகளை வென்ற வீறுடையவாம். மழை மேகமும் விரும்புமாறு கருத்து நீண்ட கூந்தல்; கருங்கடல் நீர் அளிக்கும் வெண் முத்துக்களை வென்ற வெண்பற்கள் ஆகிய இவைபோலும் இயற்கை நலம் உடையாள்; தன் மெல்லிய தோள்களில் அணிந்திருந்த நல்லணிகள் அவள் செல்வ வாழ்விற்குச் சிறப்பளித்துச் சான்று பகர்ந்திருந்தன.

இவ்வாறு இயற்கை அழகும் செயற்கை நலமும் ஒருங்கே வாய்க்கப் பெற்று விளங்கிய அவ்ஸ்பால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/107&oldid=590184" இலிருந்து மீள்விக்கப்பட்டது