பக்கம்:நெய்தற் கன்னி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 ஆ புலவர் கா. கோவிந்தன்

விடுவனோ?" என அஞ்சியிருப்பாளை அணுகிப், "ப்ெண்னே! நீ நினைப்பது போல் நிகழ்ந்து விடாது. நம் காதலர் அத்துணைக் கொடியவர் அல்லர். மேலும் பிரிந்துபோய் மறந்து வாழ்வதால் நமக்குண்டாம் துயர்க் கொடுமையை அறியாதவரும் அல்லர். நின்பால் பேரன்பு கொண்டுள்ளார் அவர். பிரிவால் உளவாகும் பெருந் துயரை அறிந்தவர். அவர் அத்தகையர் என்பதை முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றால் நான் அறிந்துளேன். உன் மனம் காதல் துயரில் ஆழ்ந்து போயிருப்பதால் அந் நிகழ்ச்சியை மறந்து விட்டது போலும்.

"பெண்னே! முன்னொரு நாள், இன்றேபோல், நம் காதலர் நாள்தோறும் தவறாது வரும் வழக்கத்திற்கு மாறாக வாராது நின்று விட்டார். அவ்வொரு நாள் பிரிவையும் உன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நீ மிகவும் வருந்தி விட்டாய். அம்மட்டோ அவன் அன்பையும் ஐயுறத் தொடங்கினாய். அணி விளங்கும் உன் தோளழகு ஒன்றிற்கே தன் உள்ளத்தைப் பறிகொடுத்து உன்மீது காதல் கொண்ட அவர், அன்று நம்முன் காட்சி அளித்த கடல் தெய்வத்தைக் காட்டிப் பெண்ணே! உன்பால் பேரன்பு கொண்டேன். உன்னை இனி ஒரு நாளும் மறவேன்; ஒருபொழுதும் பிரியேன்! என ஆணையிட்டுக் கூறிய வாய்ச் சொற்களையும் வழுவ விட்டனரோ என எண்ணி வருந்தினை. உடன் இருந்து, உன் துயர்க் கொடுமையினைக் கண்ணுற்ற நான், அத் துயரை நீ சிறிதே மறந்திருக்குமாறு, உன்னை அழைத்துக் கொண்டு, கானற்சோலைக்குச் சென்றேன். .

“ஆங்கே, தம் இன மீன்களையே கொன்று இன்று நெடிது நாள் உயிர் வாழ்ந்து உரம்பட்ட உடல் வாய்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/110&oldid=590187" இலிருந்து மீள்விக்கப்பட்டது