பக்கம்:நெய்தற் கன்னி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 இ. புலவர் கா. கோவிந்தன்

கூறினாலும், உன் பேரறிவு அதன் உட்பொருளை உணர்ந்து கொள்ளும் என்ற துணிவாலும், அவன் பெருமையை, அவன் நாட்டு உயிரினங்கள் மீது ஏற்றிப் பெண்ணே ! நம் காதலன் நாட்டுக் கழிகளின் கரைகளில் வாழும் பறவையினங்கள் பார்க்கப் பார்க்கப் பேரழ குடையவாம். அவ்வழகோடு அமையாது, கேட்கக் கேட்க மகிழ்வூட்டும் மாண்பு மிகு குணங்களும் உடையவாம். தோழி! அவை எவ்வுயிரையும் கொல்லாவாம். தமக்கு உணவாகிப் பயன்படுக என ஆண்டவனால் படைக்கப் பெற்ற உயிரினங்களையும் அவை கொன்று தின்னாவாம். கழிக்கரைகளில் அமர்ந்து இரை தேடும் அவை, கழியில், எளிதிற் பெறும் அளவில், மீன் இனங்கள் பல்கி இருப்பினும், அவை அவற்றைக் குத்திக் கொன்று தின்னாவாம். அக்கழிகளில் எழுந்து கரைகளில் மோதும் அலைகள் அவ்வாறு மோதுங்கால் கொன்று கொண்டு வந்து கரைகளில் ஒதுக்கும் மீன்களை மட்டுமே உண்ணுமாம். அத்துணைப் பேரருள் உள்ளம் வாய்ந்த பறவைகள் வாழும் நாட்டிற் குரியோன் நம் காதலன். ஆகவே அவ்னைப் பழித்துப் பாடியது போதும். இனி புகழ்ந்து ஒரு பாட்டுப் பாடுவாயாக!' என்றேன்.

'காதலன் புகழையே பாடக் கடமைப்பட்ட நான், அவன் புகழ் பாடுமாறு தோழி கேட்ட பின்னரும், அவன் புகழ் பாடாது பழித்துப் பழித்துப் பாடுவது பண்பன்று! என எண்ணினையோ என்னவோ, உடனே, தோழி! நம் காதலன் நிறைந்த அருள் உள்ளம் வாய்க்கப்பெற்ற அறவோனாவன். அத்தகையான் தன்பால் அன்புடை யாரை வருந்த விடான். தன் பிரிவால் ஒரோரொருகால் அவரை வருந்த விட்டுப் பிரிய நேரின், விரைந்து மீண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/114&oldid=590191" இலிருந்து மீள்விக்கப்பட்டது