பக்கம்:நெய்தற் கன்னி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ஆ புலவர் கா. கோவிந்தன்

ஆட்டுவதாகவே எண்ணி மகிழ்ந்து மெய்ம்மறந்து ஆடிக் கொண்டிருந்தாய். அவ்வாறு தான் காட்டும் தலையாய அன்பை, அவனால் அன்பு செய்யப்படும் நாம் அறியாவாறே செய்யும் உயர்வுள்ளம் உடையவன் அவன் என்பதை அன்று கண்டு கொண்டேன். அவ்வாறு அன்று வந்து ஆட்டி அன்பு காட்டிய அவன், நீ பிரிவால் பெருந்துயர் கொள்ளும் இப்போது வந்தும் அருள் புரியாதிரான். நீ நின் மனத்துயர் மடிந்து மகிழ மண முயற்சியோடு விரைந்து வந்து சேர்வன். வருந்தாதே!” எனக் கூறி, அவளைத் தேற்றினாள். "பெருங்கடல் தெய்வநீர் நோக்கித் தெளித்து என் திருந்திழை மென்தோள் மணந்தவன் செய்த அருந்துயர் நீக்குவேன் போன்மன், பொருந்துபு பூக்கவின் கொண்ட புகழ்சால் எழில் உண்கண், நோக்குங்கால் நோக்கின் அணங்காக்கும் சாயலாய்!

- தாக்கி 5

இனமீன் இகன்மாற வென்ற சினமீன் எறிசுறா வான் மருப்புக் கோத்து நெறிசெய்த நெய்தல் நெடுநார்ப் பிணித்து யாத்துக் கையுளாவின் யாழிசை கொண்ட இனவண்டு. இமிர்ந்து ஆர்ப்பத் தாழாது உறைக்கும் தடமலர்த் தண்தாழை 10 வீழ்ஊசல் தூங்கப் பெறின் ‘. . . . . . . . - - மாழை மடமான் பிணைஇயல் வென்றாய்! நின் ஊசல் கடை இயான் இகுப்ப நீள் தூங்காய், தடமென் தோள் நீத்தான் நிறங்கள் பகர்ந்து, ... * * . . . . .

நாணினகொல்? தோழி! நாணினகொல்? தோழி!. 15. இரவெல்லாம் நற்றோழி! நாணின என்பவை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/116&oldid=590193" இலிருந்து மீள்விக்கப்பட்டது