பக்கம்:நெய்தற் கன்னி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 ஒ புலவர் கா. கோவிந்தன்

திருவுருவம், அவள் அணி அணியும் வழக்கத்தை அறவே கைவிட்டமையால், மலர்ந்த மலர்களெல்லாம் உதிர்ந்து போக, உலர்ந்து போன பூங்கொடி போல் பொலிவிழந்து தோன்றிற்று. -

அப் பெண்ணின் இத்துயர் மிகு தோற்றம் அவள் ஆருயிர்த் தோழியின் நெஞ்சைச் சுட்டெரித்தது. இவளை இந்நிலையில் மேலும் வருந்த விட்டு வைத்தால், இவள் வாழ்விழந்து போவள். அங்ங்னமாயின், இவளைக் காக்கும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள தனக்கும் பெரும்பழி வந்து சேரும். ஆகவே, இளைஞன் வந்தால், வற்புறுத்தி வரைவிற்கு வழி காணுதல் வேண்டும் எனத் துணிந்தாள். .

எதிர் நோக்கி யிருந்த இளைஞனும் வந்தான். வந்தவனைத் தோழி எதிர்சென்று வணங்கி வரவேற்றாள். எதிர்பாரா இவ்வரவேற்பின் விளைவறிய மாட்டாது இளைஞன் விழித்தான். உடனே, அவனுக்குத் தான் உரைக்கத் துணிந்ததை உரைக்க முன் வந்தாள். முன் வந்தவள் அதை உரைப்பதற்கு முன்னர்த், "தம் படைப் பெருமையால், தம் குலப் பகைவர்களாகிய சேரனையும், சோழனையும் வென்று, அவர்க்குரிய முரசுகளோடு தம் முரசும் சேர, மும்முரசும் முழங்க நாடாளும் பாண்டிகுலப் பேரரசர், தம்மைப் பணியாத பகைவர்களைப் பாழாக்க நிறுத்தி வைக்கும் நாற்படையின் நடுவே, நிரை நிரையாக நின்று காட்சி தரும் களிற்றுப் படைபோல், ஓயாது அலைக்கும் அலை கொண்டு வந்து குவித்த மணல் மேட்டில் பல்வேறு உருவினவாய பறவை இனங்கள், தத்தம் பெடைகளோடு இரை தேர்ந்துண்டு, இணை இணையாக வீற்றிருக்க, அம்மணல் மேட்டினை அடுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/122&oldid=590199" இலிருந்து மீள்விக்கப்பட்டது