பக்கம்:நெய்தற் கன்னி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 இ புலவர் கா. கோவிந்தன்

"அன்ப! நின் காதலியின் கண்டோர் வியக்கும் அழ கெல்லாம் அழிந்து விட்டது. உயிர் போகும் நிலை வந்துற்றது அவளுக்கு இவள் இன்று இவ்வாறு வருந்துவது, அவளைக் கண்டு, காதல் கொண்டு புன்னை மரத்தடியிலும், பூஞ்சோலையிலும், மணல் மேட்டிலும் களித்து மகிழுங்கால், பெண்ணே! பிரியேன்; அஞ்சற்க!” என ஆணையிட்டு உரைத்த உன் உரையினை அவள் உண்மை என உளங் கொண்டதன் பயனே அன்றோ ! அன்ப! அவ்வாறு உன்னை நம்பிய அவளை நலியப் பண்ணுதல், நன்றோ? நம் துயர் போக்கும் துணை தெய்வமே யென நம்பி, அத் தெய்வத்தை வழிபட அத் தெய்வம், அதற்கு மாறாகத் தன்னை வந்தடைந்த அவரைக் கொன்றழிக்க நினையுமாயின், அவர் நிலை என்னாம்! அது போன்றது உன் செயல். தன் துயர் நீக்கும் துணைவன் நீ என நம்பி, அவள் உன்னை அடைந்தாள். ஆனால் நீயோ, உன்னை நம்பி உயிர் வாழ்பவள், வாழ்விழந்து அழிவதற்குக் காரணமாய் விளங்குகின்றாய். அன்ப! உன் செயல் அறமாகாது. காதல் நோயாலும், கண்டோர் கூறும் அலராலும் அவள் அழுது மடியுமாறு விடுத்து வரையாது வருத்துவது உனக்கு அழகன்று. ஆகவே, அன்ப! அவளை வரைந்து கொள்வதாம் முயற்சிகளை விரைந்து மேற்கொள்வாயாக!” என வேண்டிக் கொண்டாள்.

"உரவுநீர்த் திரைபொர ஓங்கிய எக்கர்மேல் விரவுப்பல் உருவின வீழ்பெடை துணையாக இரைதேர்ந்துண்டு அசாவிடுஉம் புள்ளினம் இறைகொள, முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண்தப,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/124&oldid=590201" இலிருந்து மீள்விக்கப்பட்டது