பக்கம்:நெய்தற் கன்னி.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

பூண்க நின் தேரே!

உலகில் பிறந்தார் அறிய வேண்டுவ அனைத்தையும் அறிந்த உயர்ந்த அறிவுடையான் ஓர் இளைஞன், பேரழகு வாய்ந்த பெண்ணொருத்திபால் காதற் றொடர்புகொண்டு களித்திருந்தான். அவ்விருவர்க்கிடையே தோன்றிய காதலுறவு நாள்தோறும் வளர்ந்து பெருக உற்ற துணை புரிந்தாள் அப் பெண்ணின் உயிர்த் தோழி. அத்தோழி அறிவே உருவாய் அமைந்தவள். அது மட்டுமல்லாமல் அவ்வறிவுரைக்கும் வழி வாழ்ந்து காட்ட வேண்டும்; அதுவே அறிவறிந்ததன் பயனாம்; அவ்வாறு அறிவுரைக் கும் வழி வாழ்ந்து காட்டாதார் அவ்வறிவினைப் பெற்றதினும் பெறாதிருப்பின் அதுவே. நன்றாம் என உணவுரும் நல்லுள்ளம் உடையவள். அவ்வுயர்வுள்ளம் வாய்க்கப் பெற்றிருந்தமையால், அவள், அந்நெறியிற் பிறழ்ந்து பிழை புரிவாரைக் காணின், அவர் ஆடவரே ஆயினும், தன்னினும் அறிவுச் செல்வத்தை ஆரப் பெற்றிருப்பவரே ஆயினும், அவர்க்கு அவர் புரியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/127&oldid=590204" இலிருந்து மீள்விக்கப்பட்டது