பக்கம்:நெய்தற் கன்னி.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 இ. புலவர் கா. கோவிந்தன்

பிழைகளை எடுத்துக் காட்டி இடித்துரைக்க முன்வரும் அஞ்சாமையும் உடன் கொண்டிருந்தாள்.

தன் காதலியின் தோழி அத்தகைய அறிவு நலம் வாய்க்கப் பெற்றவள் என்பதை அவ்விளைஞன் அறியான் போலும். அதனால், தன்னால் காதலிக்கப் பெற்றவள், தன்னைக் காதலித்துத் தனக்குப் பேரின்பச் சுவை யூட்டுபவள், துயர் உறப் பார்த்திருத்தல் பண்பன்று என்பதை உணரானாயினான். அதை உணராமையோடு அவள் படும் அத்துயர்க்கு அவனே காரணமும் ஆயினான். காதலனைக் காணாதிருப்பது காதலியர்க்கு இயலாது; ஒரு நாள் தவறினும் பெருநோயுறுவரே, அன்னார் அவனைப் பலநாள் காணாதிருக்கப் பெறின் அவர் கலக்கம் பெரிதாமே; அது எத்துணைக் கொடிதாம்! பெருங்குடியில் வந்த பெண் ஒருத்தி, தன் காதலனைக் காண அவன் விரும்பும் போதெல்லாம், விரும்பிய இடங்களுக்கெல்லாம் வருவது, அதிலும் தன் பெற்றோர் அறியாவாறு வருவது எத்துணை அருமையுடைத்து ஒரு முறை வந்து செல்ல, அவள் எத்தனை எத்தனை இடையூறு களைத் தாங்கிக் கொள்ள நேரும் அவ்விடையூறுகள் எல்லாம் அவளை, அவள் பெற்றோர் தர, அவர் பிறந்த ஊர் அறிய மணந்து கொண்டால் இல்லாகிப் போய் விடுமே 'அதனால் மன முயற்சியை எவ்வளவு விரைவில் மேற்கொள்ளலாமோ அவ்வளவும் நன்றாமே என எண்ணிப் பாராமல், வரைவு முயற்சிக்காம் கருத்தின்றியே காலம் கழித்து வந்தான். அதனால் அப் பெண்ணின் துயர் மிகுந்தது.

அவள் துயரைத் தோழி அறிந்தாள். இளைஞன் அத்துணைப் பேரறிவு பெற்றிருந்தும், அவ்வறிவுரைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/128&oldid=590205" இலிருந்து மீள்விக்கப்பட்டது