பக்கம்:நெய்தற் கன்னி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 争 புலவர் கா. கோவிந்தன்

மலர்ந்திருப்பது போல் தோன்றும் அக்காட்சி, ஆங்கு அப்பெண் உள்ளத்தில் காதற்கனலை மூட்டி, அவளைக் கலங்கித் துயர்உறச் செய்த கொடியோனாய இத்தலைவன், ஈங்கு வந்து, யாவரும் போற்றும் பேரறிவாளன் போல் வாழ்கின்றனனே! என்னே இவ்வுலகியல் ? என்ற எண்ணத்தை ஊட்டி என்னை வருத்துகிறது. -

"அன்ப ! உலக நீதிகளை யெல்லாம் ஒதி உணர்ந்தவன் நீ உனக்கு நான் அறம் உரைப்பது என்பது பொருந்தாது. ஆயினும், நீ அறிந்த அவ்வறவுரைகளை, இன்றையசூழ்நிலையால் நீ மறந்திருப்பதும் கூடும். ஆகவே, அவற்றுள் இன்றியமையாச் சிலவற்றை எடுத்துக்கூறி நினைப்பூட்டுவேன், கேள். அன்ப! வறுமையுற்று வருந்தி வருவார்க்குத் தம்மால் இயன்றதை அளித்து உதவுவது இல்வாழ்க்கையின் அடிப்படை அறமாம். தன் அருளை நம்பிவந்து தன்னை அடைந்தவரைப் பிரியாதிருப்பதே, உலக உயிர்களைப் பேணி வளர்ப்பதன் முதற்படியாம். காதல் கொண்ட காளிகையைப் பலர் அறிய மணந்து வாழ்தலே மக்கட்பண்பாடாம் என்பது போலும் உலகியல் முறைகளுக்கு ஒப்ப உயிர் வாழ்தலே பண்பு எனப் போற்றப்படும். தன் சுற்றத்தார் தனக்கு எத்தகைய பெருங் கேடு செய்யினும், அவர் கேட்டைக் கனவிலும் கருதா திருப்பதே அன்பாம். உலகில் வாழ்வார் அனைவரும் அறிவுடையராகி விடுதல் இயலாது; அறிவின்மையால் அவருட் சிலர் கூறத் தகாதான கூறி விடுவதும் உண்டு. அங்கனம் அவர் யாதேனும் கூறுவாராயின், அவர் அறியாமையை நினைந்து, அவர் கூறியனவற்றைப் பொறுத்துக் கொள்வதே அறிவாம். ஒருவர்க்கு ஒர் உறுதிமொழி அளித்தக்கால், அளித்த அவ்வுறுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/130&oldid=590207" இலிருந்து மீள்விக்கப்பட்டது