பக்கம்:நெய்தற் கன்னி.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 & புலவர் கா. கோவிந்தன்

வாழ்கின்றனனே என்ற சினமிக்கமையால் சிந்தை செயல்படுவது மறந்து நானும் என் தோழியும் ஏதேனும் கூறத் தகாதன கூறியிருப்பின், நின் பெரிய உள்ளம் அதைப் பொறுத்துக் கொள்ளுமாக. பிரியேன் என அன்று உரைத்த உன் உரை பொய்த்துப் போகாவாறு பேணிக் காப்பாற்றுவாயாக, உங்கள் களவொழுக்க உறவினை ஊரார் அறிந்து கொள்வராயின் அலர் கூறிப் பழிப்பர் ஆதலின், அதை அவர் கூறியவாறு மறைத்துக் காத்து மணவாழ்வு மேற்கொள்வாயாக. களவின்ப வாழ்வு குறைபாடுடையது என்பதை அறிந்தும், அதில் ஆழ்ந்து போகும் உன் அறிவை ஒறுத்து அடக்குவாயாக.

"அன்ப! பேரற நூல்களைப் பெருகக் கற்றவன் நீ. அவ்வாறு கற்ற நீ அவை கூறும் இந்நெறி முறைகளை மேற்கொண்டு வாழ்தல் வேண்டும். அதில் நீ தவறி விட்டாய். அதுவே நினக்குப் பெரும் பழியாம். நீயே அறிந்து மேற்கொள்ள வேண்டிய இவ்வறங்களை நீ மறந்து வாழும் இந்நிலையில், நான் நினைப்பூட்டிய பின்னரும் மேற்கொள்ளக் கருதாயேல், அது நினக்குப் பெருங் கேடாம். அவள் தந்த காதல் இன்பம் உண்டுகளிப்புற்ற நீ, அவளை அழிய விடுவது அறமாகாது. பால் குடித்தார் ஒருவர், பாலைக் குடித்து விட்டு, அப்பாற் குடத்தைக் கவிழ்த்து அழித்ததற்கு ஒப்ப அறக்கொடிதாம். அக்கொடுமைக் குற்றம் உனக்கு வந்து வாய்க்காவாறு, உன் பொருட்டு வருந்துவாள் வருத்தம் ஒழியும்வண்ணம் அவளை வரைந்து வாழ்வளிக்க, உன் தேர் விரையுமாக!” என வேண்டிக் கொண்டாள்.

"மாமலர் முண்டகம் தில்லையோடு ஒருங்குடன் கானல் அணிந்த உயர்மணல் எக்கர்மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/132&oldid=590209" இலிருந்து மீள்விக்கப்பட்டது