பக்கம்:நெய்தற் கன்னி.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ஆ 133

கடற்பரப்பையே நோக்கியவாறு காத்துக்கிடந்தனர். அவர் களெல்லாம், வாணிகம் கருதி வங்கம் ஏறிக் கடற்கடந்து சென்ற தத்தம் கணவன்மாரையும், தந்தையரையும், மைந்தர்களையும், அண்ணன் தம்பிமார்களையும் எதிர் நோக்கியிருப்பவராவர்.

வங்கம் ஏறிச் சென்றவர்களின் வருகையைக் காண வேண்டிய ஆர்வ மிகுதியால், அவர்கள், அம்மாலைக் காலத்தின் கொடுமையையும் பொருட்படுத்தினாரல்லர். கரையில் பரவும் இருளைக் காண வேண்டும் என்ற வேட்கை மிகுதியால், கடல் ஆரவாரம் செய்துகொண்டே, கரை நோக்கி விரைவதுபோல், கடலோர நீர், கரை நோக்கிப் பெருகிப் பாய்ந்தது. மலர்களில் படிந்து தேன் உண்டு திரிந்த வண்டுகள் மாலை வரவால் ஒளி மயங்கக் கண்டு, மலர்களை மறந்து அவ்விடம் விட்டு அகன்றன. அதனால் அவற்றின் ஒலி அடங்கிப் போன அக்கடற்கரை வெறிச்சோடிப் போயிற்று. கழி நீரில் மலர்ந்து மணம் நாறிய மலர்கள் வாய் மூடி வதங்கிப் போயின. உலகில் வாழும் அளவில் கோடி உயிர்கள் அனைத்தும் ஒரு சேர நடுங்கி அஞ்சுமாறு உலகை ஒருங்கே விழுங்கி அழிப்பது போல் இருள் சூழ்ந்து கொண்டது. அந்நிலையில் கொடிய பனி வேறு ஆங்குக் கூடியிருந்தோரை நடுங்கப் பண்ணிற்று. அந்நிலையிலும் அவர்கள் அவ்விடம் விட்டு அகன்றாரல்லர். -

அவ்வாறு ஆங்குக் காத்துக் கிடந்தவருள் நனி இளமைப் பருவத்தளாய நங்கை யொருத்தியும் இருந்தாள். அவளை அண்மையில் மணந்து கொண்ட அவள் கணவன் வாணிகம் கருதிக் கடல் கடந்து போயிருந்தான். அவள், அவன் மீது கொண்ட கரை கடந்த காதலால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/135&oldid=590212" இலிருந்து மீள்விக்கப்பட்டது